முருகன் அடியவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
முருகன் அடியவர்களாகிய தங்களின் பேருதவியினாலும், வங்கியிலிருந்து பெறப்பட்ட 20 மில்லியன் கடனினாலும், ஆலயத்தில் கும்பாபிசேகம் நடாத்துவதற்கு தேவையான பெரும்பகுதி வேலைகள் முடிவடைந்துள்ளது. விநாயகர் துர்க்கை சந்நிதிகளுக்கான சிற்பகற்கள் சென்ற மார்கழியில் இங்கு வந்தடைந்துள்ளன. உட்புற சந்நிதிகளில் முருகன் சந்நிதியின் பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்டுளது. இந்திய சிற்பிகளுக்கு விசா நீண்ட தாமததிற்கு பின்னர் 01.03.2022 இல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் ஒரிரு வாரங்களில் இங்கு வரவுள்ளனர். சில அடியவர்கள் சந்நிதிகள் பலவற்றிற்கு மேலதிக நிதி வழங்கியுள்ளனர். அதே சமயம் மிகுதி வேலைகள் ஆரம்பிக்கபடவுள்ள நிவையில், அடியார்கள் சிலர் தாமாக முன்வந்து உள்சந்நிதிக்கதவுகள், சந்நிதிகளின் விமானத்தின் நான்கு பக்கத்திலும் அமையவிருக்கும் சிலைகள், சந்நிதியின் மேற்பகுதியில் அமையும் வாகன சிலைகள்;, மற்றும் கலசம் என்பவற்றில் சிலவற்றிற்கு உபயமளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள. ஏனைய அடியார்களையும் இதில் இணைப்பதற்காக, அவற்றை செய்து இங்கு கொண்டுவந்து கடட்டுவதற்கான செலவு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் கட்டிட குழுவினருடன This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. அல்லது தொலைபேசி 401 44 741 மூலம் தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தை அறியத்தரவும். பலர் ஒரே உபயத்தை செய்வதற்கு விருப்பம் தெரிவித்தால், முதலில் ஆலயத்திற்கு நிதியளித்தவர் அல்லது அவரது குடும்பம்(பெற்றோர் பிள்ளைகள் சேர்ந்து) குறைந்தது 25000 நிதியுதவியளித்தவர்கட்கு முன்னுரிமையளிக்கப்படும். அடியவர்க்ள 3 கிழமைகளுக்குள் தங்கள் விருப்பதை அறியத்தரும்படி மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம். அடியவர்கள் 3 கிழமைகளுக்குள் தங்கள் விருப்பதை அறியத்தரும்படி மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
சிலைகள், சந்நிதிகள், பொருட்கள் | சந்நிதி |
தேவையான |
கலசம்( தற்காலிகமானது) | முருகன் | 10 000 |
கலசம் | விநாயகர் | 10 000 |
கலசம் | பார்வதி | 7 000 |
கலசம் | சண்டிகேஸ்வரர் | 4 000 |
கதவு | விநாயகர் | 50 000 |
கதவு | முருகன் | 75 000 |
சுவாமி சிலைகள் (சந்நிதிகளின் மேல்பகுதியில் விமானத்தின் நான்கு பக்கத்திலும் அமையும் சிலைகள்(4), ஒரு சிலைக்கான செலவு |
விநாயகர் | 8 000 |
எலி சிற்பங்கள், சந்நிதிகளின் நான்கு மூலைகளில் அமையும் வாகனங்கள் (8) ஒரு வாகனத்திற்கான செலவு |
விநாயகர் | 1 500 |
ஆசனக்கல் (பீடக்கல்) | விநாயகர் | 10 000 |
சுவாமி சிலைகள் 5 சிலைகள் |
முருகன் | 15 000 |
படிக்குரிய சுவர் (vangen) | முருகன் | 35 000 |
குறிப்பு: சிலைகளுக்கான நிதி இந்தியாவில் செதுக்கப்பட்ட பின்னர் ஏற்றூக்கொள்ளாப்படும்.
கீழ் தரப்பட்டுள்ள சந்நிதிகளை கட்டிமுடிப்பதற்கு தொடர்ந்தும் நிதி தேவையாகவுள்ளது. இவற்றிற்கு அடியவர்கள் விரும்பிய தொகையை எந்த நேரத்திலும் வழங்கலாம்.
விநாயகர் சந்நிதி | 200 000 |
சண்டிகேஸ்வரர் சந்நிதி | 200 000 |
சிறிய தற்காலிக விமானம் | 500 000 |
மூலஸ்தான உள் வேலைகள் | 100 000 |
வாகன தரிப்பிடத்தில் கல் பதித்தல் | 500 000 |
வெளி வீதியில் கல் பதித்தல் | 500 000 |
பார்வதி சந்நிதி | 80 000 |
குறிப்பு: சந்நிதிகளுக்கு குழுக்களாகவும் உபயம் வழங்கலாம்
இங்கனம்
கட்டடக்குழு, ஆலய நிர்வாகாம்