முருகன் அடியவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

Written by Shan A. Posted in Nyheter

முருகன் அடியவர்களாகிய தங்களின் பேருதவியினாலும், வங்கியிலிருந்து பெறப்பட்ட 20 மில்லியன் கடனினாலும், ஆலயத்தில் கும்பாபிசேகம் நடாத்துவதற்கு தேவையான பெரும்பகுதி வேலைகள் முடிவடைந்துள்ளது. விநாயகர் துர்க்கை சந்நிதிகளுக்கான சிற்பகற்கள் சென்ற மார்கழியில் இங்கு வந்தடைந்துள்ளன. உட்புற சந்நிதிகளில் முருகன் சந்நிதியின் பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்டுளது. இந்திய சிற்பிகளுக்கு விசா நீண்ட தாமததிற்கு பின்னர் 01.03.2022 இல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் ஒரிரு வாரங்களில் இங்கு வரவுள்ளனர். சில அடியவர்கள் சந்நிதிகள் பலவற்றிற்கு மேலதிக நிதி வழங்கியுள்ளனர். அதே சமயம் மிகுதி வேலைகள் ஆரம்பிக்கபடவுள்ள நிவையில், அடியார்கள் சிலர் தாமாக முன்வந்து உள்சந்நிதிக்கதவுகள், சந்நிதிகளின் விமானத்தின் நான்கு பக்கத்திலும் அமையவிருக்கும் சிலைகள், சந்நிதியின் மேற்பகுதியில் அமையும் வாகன சிலைகள்;, மற்றும் கலசம் என்பவற்றில் சிலவற்றிற்கு உபயமளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள. ஏனைய அடியார்களையும் இதில் இணைப்பதற்காக, அவற்றை செய்து இங்கு கொண்டுவந்து கடட்டுவதற்கான செலவு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் கட்டிட குழுவினருடன This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. அல்லது தொலைபேசி 401 44 741 மூலம் தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தை அறியத்தரவும். பலர் ஒரே உபயத்தை செய்வதற்கு விருப்பம் தெரிவித்தால், முதலில் ஆலயத்திற்கு நிதியளித்தவர் அல்லது அவரது குடும்பம்(பெற்றோர் பிள்ளைகள் சேர்ந்து) குறைந்தது 25000 நிதியுதவியளித்தவர்கட்கு முன்னுரிமையளிக்கப்படும். அடியவர்க்ள 3 கிழமைகளுக்குள் தங்கள் விருப்பதை அறியத்தரும்படி மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம். அடியவர்கள் 3 கிழமைகளுக்குள் தங்கள் விருப்பதை அறியத்தரும்படி மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

சிலைகள், சந்நிதிகள், பொருட்கள் சந்நிதி

தேவையான
தொகை (kroner)

கலசம்( தற்காலிகமானது) முருகன் 10 000
கலசம் விநாயகர் 10 000
கலசம் பார்வதி 7 000
கலசம் சண்டிகேஸ்வரர் 4 000
கதவு விநாயகர் 50 000
கதவு முருகன் 75 000
சுவாமி சிலைகள் (சந்நிதிகளின் மேல்பகுதியில் விமானத்தின் நான்கு பக்கத்திலும் அமையும் சிலைகள்(4),
ஒரு சிலைக்கான செலவு
விநாயகர் 8 000
எலி சிற்பங்கள், சந்நிதிகளின் நான்கு மூலைகளில் அமையும் வாகனங்கள் (8)
ஒரு வாகனத்திற்கான செலவு
விநாயகர் 1 500
ஆசனக்கல் (பீடக்கல்) விநாயகர் 10 000

சுவாமி சிலைகள் 5 சிலைகள்
(பஞ்ச கோஸ்ட சிலைகள்) ஒரு சிலைக்கான செலவு

முருகன் 15 000
படிக்குரிய சுவர் (vangen) முருகன் 35 000

குறிப்பு: சிலைகளுக்கான நிதி இந்தியாவில் செதுக்கப்பட்ட பின்னர் ஏற்றூக்கொள்ளாப்படும்.

கீழ் தரப்பட்டுள்ள சந்நிதிகளை கட்டிமுடிப்பதற்கு தொடர்ந்தும் நிதி தேவையாகவுள்ளது. இவற்றிற்கு அடியவர்கள் விரும்பிய தொகையை எந்த நேரத்திலும் வழங்கலாம்.

விநாயகர் சந்நிதி 200 000
சண்டிகேஸ்வரர் சந்நிதி 200 000
சிறிய தற்காலிக விமானம் 500 000
மூலஸ்தான உள் வேலைகள் 100 000
வாகன தரிப்பிடத்தில்  கல் பதித்தல் 500 000
வெளி வீதியில் கல் பதித்தல் 500 000
பார்வதி சந்நிதி 80 000

குறிப்பு: சந்நிதிகளுக்கு குழுக்களாகவும் உபயம் வழங்கலாம்


இங்கனம்
கட்டடக்குழு, ஆலய நிர்வாகாம்

We are proud to inform you that we are going to start build the inner shrines soon

Written by Shan A. Posted in Nyheter

Dear Lord Murugan devotes!

 We are proud to inform you that we are going to start build the inner shrines soon. Sculptures of Ganesha ,Amman Sannidhi in granite stone is scheduled for delivery on January 4th, 2022 and sculptors from Chennai, India are expected to arrive in late January to help build the shrines. In the inner sanctum consisting of the Durga, Vasantha Mandapam, Arumugasami, Natarajar Navagraha, Santhanagopalar/ Lakshmi Narayanar, Kodithambam, Kodithambakkal, Mayuram altars have been fully funded by our devotees

Below are the details of the shrines that have been partial funded along with the remaining amount required. These shrines must be completed before consecration. The cost of international shipping has multiplied in the world market increasing the cost of importing sculptures from India by approximately 8 times.

We are making our best efforts to conduct the temple consecration in 2022. In order for us to achieve this milestone, we humbly ask you to provide your best contribution as soon as possible. Please feel free to form small group to help fund any of the shrines which require further payment.

Shrines

Estimated cost

Fund received

Remaining amount required in NOK

Vinayagar/Ganesha shrine

650 000

350 000

300 000

Sandigeswar shrine

100 000

35 000

65 000

Parvathy(Shakti) shrine

350 000

100 000

250 000

Vimanam ( tower on main shrine)

300 000

150 000

150 000

Unexpexted coast due to COVID 19

 

 

500 000

Additional statues around inner shrines (9)

 

 

125 000

Pavement bricks around the temple and the parking lot

 

 

1 200 000

 

In addition to building inner shrines, we have to lay paving bricks around the temple and parking lot to meet condition enforced by the Oslo municipality building authority.

Sincerely

Temple Building Committee and the temple administration

புதிய ஆலயத்தின் விநாயகர் அம்மன் சந்நிதிகளின் சிற்பக்கற்கள் தை 2022 முதல் வாரத்தில்; இங்கு வந்தடையும்

Written by Shan A. Posted in Nyheter

In English

சந்நிதிகளை கட்டுவதற்காக சிற்பிகளை தை மாதத்தில் இங்கு அழைப்பதற்கான ஒழுங்குகள் நடைபெறுகிறது. உட்புற சந்நிதிகளில் துர்க்கை, வசந்த மண்டபம், ஆறுமுகசாமி, நடராஜர்இ நவக்கிரகம், சந்தானகோபாலர்/லட்சுமி நாராயணர் ஆகியவற்கும், கொடித்தம்பம், கொடித்தம்பக்கல், மயூரம், பலிபீடம், ஆகியவற்கு முழுமையாக அடியவர்கள் நிதி உதவி வழங்குகிறார்கள்.

பகுதியாக நிதி உதவி வழங்கியுள்ள சந்நிதிகளின் விபரங்களும் மற்றும் அதற்குரிய மேலதிக நிதித்தேவைகளும் கீழே தரப்பட்டுள்ளது. இச்சந்நிதிகள் கும்பாபிசேகத்திற்கு முன்னர் கட்டி முடிக்கப்படவேண்டும். மேலும் தற்போது கப்பலில் கொள்கலன் அனுப்பும் செலவுகள் உலக சந்தையில் பல மடங்காக உயர்ந்துள்ளது. இக்காரணத்தினால் இந்தியாவிலிருந்து சிற்பக்கற்களை இறக்குமதி செய்யும் செலவுகள் அதிகரித்துள்ளது.

 

சந்நிதிகள்

மொத்த செலவு (மதிப்பீடு)

இதுவரை அனுசரணை வழங்கப்பட்ட தொகை

இன்னும் தேவையாகவுள்ள தொகை

 

Vinayagar

650 000

350 000

300 000

விநாயகர் சந்நிதி

Sandigeswar

100 000

35 000

65 000

சன்டேஸ்வரர்

பார்வதி சந்நிதி

350 000

100 000

250 000

Vimanam தற்காலிக

300 000

150 000

150 000

விமானம்(மூலஸ்தானத்தின் மேல் அமையவிருக்கும் கோபுரம்)  

விலையுயர்வுகள் எதிர்பாரத செலவுகளின் தாக்கம்

 

 

500 000

கோஸ்த விக்கிரகங்கள்(9)

 

 

125 000

வெளி வீதியிற்கும் வாகனத்தரிப்பிடத்திற்கும் கல் பதித்தல்

 

 

1 200 000

தேவைப்படும் நிதி

 

 

2 590 000

ஆலய கும்பாபிசேகத்தை 2022 இல் நடாத்துவதற்கு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தங்களால் இயன்ற பங்களிப்பை துரிதமாக வழங்கி ஆலய கும்பாபிசேகத்தை சிறப்பாக நடைபெற உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

சந்நிதியிற்களுக்கான அனுசரணையை குழுக்களாகவும் இணைந்து வழங்கலாம். வெளி வீதியிற்கும் வாகனத்தரிப்பிடத்திற்கும் கல் பதிக்கவேண்டும் என்பது மாநகரசபையினால் விதிக்கப்பட்ட நிபந்தனையாகும் (krav iht. godkjent byggetillatelsen). இதைத்தவிர ஆலய வெளிச்சுவருக்கும் வண்ணம் பூச வேண்டிய செலவுகள் உள்ளது
என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

குறிப்பு: (கோஸ்த விக்கிரகங்கள்: முருகன் சந்நிதியில் வெளிச்சுவரிலும் பிள்ளையார், அம்மன் சந்நிதிகளில் மேல்பகுதியிலும் அலங்காரத்திற்காக வைக்கப்;படும் சிலைகள்).

இங்கனம்
ஆலய கட்டக்குழுஇ நிர்வாகம்;

ஆலய உள் சந்நிதிக்கான சிற்பக்கல்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது

Written by Shan A. Posted in Nyheter

விநாயகர் மற்றும் துர்க்கை சந்நிகள் இந்தியாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்டு சென்ற வாரம் (06.11.21) இல் கப்பலில் சென்னையிலிருந்து ஒஸ்லோவிற்கு அனுப்பிவைகப்பட்டுள்ள‌து. இவை மார்கழி கடைசியில் ஓஸ்லோ வந்தடையும். இந்தியாவிலிருந்து சிற்பிகளை இங்கு வரவழைப்பதற்கான விசா கோரும் நடவடிக்கைகள் மெற்கொள்ளப்படுகிண்றது என்பதை அடியவர்களுக்கு அறியத்தருகிறோம்.

ஆலய கீழ் மண்டபம் பாவனைக்கு தயாராகவுள்து

Written by Shan A. Posted in Nyheter

புதிய ஆலய கட்டிடத்தில் அமைத்துள்ள மண்டபத்தை பல அடியார்கள் திருமண வைபவம் போன்ற விழாக்களை நடாத்த விரும்புவதாலூம், இதனால் வரும் வருமானத்தை கட்டட நிதியிற்கு பயன்படுத்தலாம் என்பதாலும் மண்டபத்தை பாவனைக்கு விடுவது என சைவப்புலவர் வசந்தன் குருக்கள் மற்றும் அவரின் சகாக்களின் ஆலோசனையுடனும்  ஆலய நிர்வாகமும் கட்டடக்குழுவும் முடிவு செய்து 01.09.21 இல் கிரஹப்பிரவேச நிகழ்வு நடைபெற்றது என மகிழ்ச்சியுடன் தங்களுக்கு அறியத்தருகிறோம். ஆலய கீழ் மண்டபத்திற்கு மட்டும் கிரஹப்பிரவேசம் செய்யப்பட்டது. COVID 19 கட்டுப்பாடுகள் காரணமாக குருமார்கள் ஆலய நிர்வாகம், கட்டிடகுழு, மட்டுமே  இந்நிகழ்வில் பங்கு கொண்டார்கள். இந்நிகழ்வில் இருந்து பிரதமகுரருக்கள் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர்களின் வருகையை 31.08.21 வரை நிச்சயப்படுத்த முடியாமல் இருந்தது. இக்காரணத்தினால் எமது அங்கத்தவர்களுக்கும் அனுசரணையாளர்களுக்கும் உரிய நேரத்தில் அறிவிக்கமுடியாமைக்கு மனம் வருந்துகிறோம். ஆலய மண்டபத்தை அடியவர்கள் மங்களகர நிகழ்வுகளுக்கான பாவனைக்கு பதிவு செய்யலாம். மேலதிக விபரங்களுக்கு ஆல்ய காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளவும். இதில் வரும் வருமானம் நடைமுறை செலவுகளுக்கும் (மின்சாரம், இதர வரிகள்) ஆலய கட்டட நிதியிற்கும் வலுச்சேர்க்கும். அடியவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கமுடியாமல் உள்ள சூழ்நிலைக்கு நாம் மனம் வருந்துகிறோம்.